திருப்பூர் சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழுவின் தளம்
அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
அறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தின விழா தொடர்பான 10 X 6 அளவுள்ள ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள் திருப்பூரில் 20 இடங்களில் வைக்கப்பட உள்ளன. அவற்றின் வடிவங்கள் கீழே...
இவற்றுக்கு விளம்பர உதவி செய்த 'கிளாசிக் போலோ'நிறுவனத்திற்கு நன்றி!