அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Friday 31 August 2012

சுதந்திர தினவிழா- இரவு நிகழ்வுகளின் படங்கள்

சுதந்திர தின நிறைவு விழா:

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்


தினமணி ஆசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கிறார் தினமணி குடும்பத்தைச் சேர்ந்த பி.ஒய்.தட்சிணாமூர்த்தி.

ஈரோடு சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூலை நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலம் வெளியிட, சக்தி எம். சுப்பிரமணியம் பெறுகிறார். அருகில் நூலாசிரியர் சு.சண்முகவேல்.

டி.ஏ.ஷான் தயாரித்த 'தேசபக்திப்பாடல்கள்'  குறுந்தகடை சக்தி எம்.சுப்பிரமணியம் வெளியிட, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதி பெறுகிறார்.

நிகழ்ச்சியில்  முன்னிலை  வகித்து  பேசுகிறார்,    திருப்பூர்  திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம்.

விஜயாபுரம், குரும்பபாளையத்தைச் சேர்ந்த முதியவர் பி.சந்திரன் சுதந்திர தின விழா துவங்கியது முதல் டவுன்ஹாலில் மகாத்மா காந்தி வேடத்தில் நின்றபடி அனைவரையும் வரவேற்றார். அவரை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கௌரவித்தார்.

சுதந்திர தினத் திருவிழாவின் முத்தாய்ப்பாக, விழாப் பேருரை ஆற்றுகிறார் 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

தினமணி  ஆசிரியருக்கு   தனது  'உடையும்  இந்தியா'  புத்தகத்தை  நினைவுப் பரிசாக  வழங்குகிறார்  எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்.

தினமணி  ஆசிரியர்  கே.வைத்தியநாதனுக்கு   நினைவுப் பரிசு  வழங்குகிறார்  IDCC  நிர்வாகியான ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

திருப்பூர்  திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியத்துக்கு IDCC நிர்வாகியும் திருப்பூர் அறம் அறக்கட்டளை பொறுப்பாளருமான வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதிக்கு IDCC நிர்வாகியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொறுப்பாளருமான எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நேஷனல்  சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலத்துக்கு பத்திரிகையாளர் வ.மு.முரளி நினைவுப்பரிசு வழங்குகிறார்.

விழா நிறைவில் மகிழ்ச்சியுரை ஆற்றுகிறார் IDCC உறுப்பினர் பி. சத்யன்.
காந்திய மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி நடத்திவரும்  கையெழுத்து இயக்கத்தின் அங்கமாக, விழா மேடையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனிடம் கையெழுத்து பெறும் காந்திய மக்கள் இயக்க நண்பர்கள்.

சுதந்திர தினத் திருவிழா இனிதே நிறைவடைந்த களிப்பில், தினமணி ஆசிரியருடன் விழாக்குழுவினர்.

சுதந்திர தினவிழா- மாலை நிகழ்வுகளின் படங்கள் - 2

சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா, 
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா:

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன்.

கரடிவாவி அருகில் உள்ள லட்சுமி நாயக்கன் பாளையத்தில் முதியோர் இல்லம் நடத்தும் ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தா நினைவு வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை நிர்வாகி அன்பு கங்காதரனை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.
முருகம்பாளையத்திலும் கோதபாளையத்திலும்  இயங்கும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியின் பொறுப்பாளர்கள் கண்ணன், ரமேஷ் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


திருமுருகன் பூண்டியில் அன்பு இல்லம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்தும் விவேகானந்த கேந்திரா நிர்வாகி வாசவியை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


திருப்பூர் இஸ்லாமியர்களிடையே நற்பணி ஆற்றிவரும் குர்பானி அறக்கட்டளை செயலாளர் எம்.அகமது பைசலை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.

அலகுமலையில் இயங்கும் பாரதியார் குருகுல நிர்வாகி எஸ்.ராஜேஷை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


அமராவதிபாளையத்தில்  இயங்கும் மகாத்மா காந்தி கருணை இல்லத்தின் நிர்வாகிகள் செந்தில்வேல், விஜயகுமார் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.
 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.



ஓவியப் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன்.

கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறார் மேகலா குழும நிறுவனங்களின் தலைவர் சி.சுப்பிரமணியம்.


போட்டியில் வென்ற கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன்.

போட்டியில் வென்ற கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்குகிறார் திருப்பூர் தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் வி.பொன்னுசாமி.

திருப்பூர் துணை மேயர் எஸ்.குணசேகரனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி. எம்.சுப்பிரமணியம்.

தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்க செயலாளர் வி.பொன்னுசாமிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் IDCC நிர்வாகி ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

தொழிலதிபர் மேகலா சி.சுப்பிரமணியனுக்கு IDCC நிர்வாகி எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

சுதந்திர தினத் திருவிழா  நிகழ்ச்சியில் பெரும்  திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள்.

.

சுதந்திர தினவிழா - மாலை நிகழ்வுகளின் படங்கள்

கருத்தரங்கம் - கல்வியும் பண்பாடும்:

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி பேசுகிறார்.
கருத்தரங்கில் பேசுகிறார் கிருஷ்ண. ஜெகநாதன்.

கருத்தரங்கில் பேசுகிறார் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன்.

கருத்தரங்கில் பேசிய தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் கிருஷ்ண ஜெகநாதனுக்கு IDCC நிர்வாகி நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.   
கருத்தரங்கில் பேசிய ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டனுக்கு திருப்பூர் அறம் அறக்கட்டளை நிர்வாகி வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த விவேகானந்தா பள்ளி செயலர் எக்ஸ்லான் கே.ராமசாமிக்கு மகாகவி வித்யாலயா பள்ளி தாளாளர் சி.மணி நினைவுப்பரிசு வழங்குகிறார். அருகில் தலைமை வகித்த பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி. 
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
வீரத்தாய் நாட்டிய நாடகம்:

சிருஷ்டி அகாடெமி  குழந்தைகளின் கலை நிகழ்ச்சி

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தேசிய சிந்தனைக் கழகத்தின் நகரத் தலைவர் அரிமா. எம்.ராமகிருஷ்ணன் பேசுகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அருள்நிதி டி.ஆர்.முரளிதரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

'வீரத்தாய்' நாட்டிய நாடகத்தில் ஒரு காட்சி.

அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியரின் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம்.

அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமாருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமார் பேசுகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
.


சுதந்திர தினவிழா - மதிய நிகழ்வுகளின் படங்கள்

 மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள்:

கலைநிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் கே.கிங் நார்சியசுக்கு IDCC உறுப்பினர் ஆர்.செல்வராஜ் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

கலைநிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த  இன்னர்வீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜாத்தி சந்தானகிருஷ்ணனுக்கு இட்ச்க் உறுப்பினர் கே.சிவா நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

வானவில் அகாடெமி, சிருஷ்டி அகாடெமி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம்.

கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. கே.தங்கவேலு உள்ளிட்டோர்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவியின் தனி நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் குச்சிப்புடி நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் மலையாள நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவர்களின் வீர நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் இனிய நடனம்.

வானவில் அகாடெமி பள்ளி நிர்வாகிக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

கருத்தரங்கம்- அரசியலும் நிர்வாகமும்:


கருத்தரங்கில் பேசுகிறார் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலு.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.ஈஸ்வரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

முன்னிலை வகித்த தொழிலதிபர் ஓகே டெக்ஸ்டைல்ஸ் எம். கந்தசாமிக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. கே.தங்கவேலுக்கு IDCC உறுப்பினர் டி.ஹரிகிருஷ்ணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

கருத்தரங்கில் பேசிய கோவை வழக்குரைஞர் ஆர்.லட்சுமண நாராயணனுக்கு IDCC உறுப்பினர் பார்த்திபன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

.