அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Thursday 30 August 2012

சுதந்திர தின விழா- காலை நிகழ்வுகளின் படங்கள்


தேசியக் கொடியேற்றமும் துவக்க விழாவும்: 



சுதந்திரப் போராட்ட வீரரும், அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் செயல் தலைவருமான தியாகி ஜி.முத்துசாமி தேசியக் கொடியேற்றுகிறார்








திருப்பூர் டவுன்ஹாலில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடி.

சுதந்திர தின துவக்க விழாவில் உரையாற்றுகிறார் தியாகி ஜி.முத்துசாமி.

தியாகி ஜி.முத்துசாமிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த டி.கே.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் லினக்ஸ் சவுகத் அலிக்கு தொழிலதிபர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாலளர் ஏ.ராதாகிருஷ்ணனுக்கு திருமதி ஸ்ரீவித்யா நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்  சங்கத்தின் தலைவர் கே.பி.கோவிந்தசாமிக்கு பத்திரிகையாளர் வ.மு.முரளி நினைவுப்பரிசு வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த  திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கத்தின் தலைவர் தாமு.வெங்கடேசனுக்கு சர்வோதய சங்கத்தின்  மாநில முன்னாள் தலைவர் ஜி. வீரப்பிரகாசம் நினைவுப்பரிசு வழங்கினார்.
துவக்க விழா நிகழ்வில் பார்வையாளர்கள்.

 கருத்தரங்கம் - தொழிலும் பொருளாதாரமும்:


கருத்தரங்கில் பேசுகிறார் நிப்ட்-டீ கல்லூரியின் தலைவர் ராஜா சண்முகம்.
கருத்தரங்கில் பேசுகிறார், கோவையிலுள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ப.கனகசபாபதி.

ராஜா சண்முகத்துக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த  திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் எம்.பி. முதுரத்தினதுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் வாசகர் வட்டம் பொறுப்பாளர் கே. சிவகுமார்.

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் டி.ஆர்.விஜயகுமாருக்கு, IDCC உறுப்பினர் ஒய்.எஸ்.ரஞ்சித் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

பேராசிரியர் ப.கனகசபாபதிக்கு IDCC உறுப்பினர் பி.சத்யன் நினைவுப்பரிசு வழங்குகிறார். 

இளம் பாடகரின்  தேசபக்திப்பாடல் நிகழ்ச்சி: 


நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார் சண்முகானந்த சங்கீத சாபாவின் தலைவர் வழக்குரைஞர் வி.வீரராகவன்.

பெற்றோர் மற்றும் குழுவினருடன் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இளம் பாடகர் சு.மகிழன் பரிதி.

இசை நிகழ்ச்சியை கண்டு களிக்கும் பார்வையாளர்கள்.
 
செல்வன் சு.மகிழன் பரிதிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

வழக்குரைஞர் வி.வீரராகவனுக்கு IDCC உறுப்பினர் ஆர்.செல்வராஜ் நினைவுப்பரிசு வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த குர்பானி அறக்கட்டளை செயலாளர் எம். அகமது பைசலுக்கு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஆர்.அண்ணாதுரை நினைவுப் பரிசு வழங்குகிறார்.

விழா அழைப்பிதழ்களை நன்கொடையாக வழங்கிய திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் குமாரசாமிக்கு பத்திரிகையாளர் வ.மு.முரளி நினைவுப்பரிசு வழங்குகிறார்.

IDCC பணிகளுக்கு உறுதுணையாக உள்ள திருப்பூர் மணமாலை அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீநிவாசனுக்கு சென்னை அன்பர் ஓகை. நடராஜன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

கருத்தரங்கம்- இயற்கை வளங்களும் சுகாதாரமும்:


நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து  கருத்தரங்கில் பேசுகிறார் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.பழனிசாமி.

கருத்தரங்கில் பேசுகிறார் திருமானூர், இயற்கை வாழ்வியல் சங்கத்தின் தலைவர் டாக்டர் அ.காசிப்பிச்சை.

கருத்தரங்கில் பேசுகிறார் ஈரோடு, தமிழக பசுமை இயக்கத்தின் தலைவர் டாக்டர் வெ.ஜீவானந்தம்.

டாக்டர் வெ.ஜீவானந்தத்துக்கு திருமதி ராதிகா முரளி நினைவுப்பரிசு வழங்குகிறார்.

டாக்டர் அ.காசிப்பிச்சைக்கு டாக்டர் திருமதி. கிங் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

விவசாய சங்கத் தலைவர் என்.எஸ்.பழனிசாமிக்கு IDCC உறுப்பினர் கே.சிவா நினைவுப்பரிசு வழங்குகிறார். உடன் திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் தலைவர்  ஆர்.அண்ணாதுரை உள்ளார்.
விழா நாளில், டவுன்ஹாலின் நுழைவாயிலில், மதுவிலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் காந்திய மக்கள் இயக்கத்தால் நடத்தப்பட்டது.


.

No comments:

Post a Comment