அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Friday 31 August 2012

சுதந்திர தினவிழா - மாலை நிகழ்வுகளின் படங்கள்

கருத்தரங்கம் - கல்வியும் பண்பாடும்:

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி பேசுகிறார்.
கருத்தரங்கில் பேசுகிறார் கிருஷ்ண. ஜெகநாதன்.

கருத்தரங்கில் பேசுகிறார் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன்.

கருத்தரங்கில் பேசிய தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் கிருஷ்ண ஜெகநாதனுக்கு IDCC நிர்வாகி நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.   
கருத்தரங்கில் பேசிய ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டனுக்கு திருப்பூர் அறம் அறக்கட்டளை நிர்வாகி வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த விவேகானந்தா பள்ளி செயலர் எக்ஸ்லான் கே.ராமசாமிக்கு மகாகவி வித்யாலயா பள்ளி தாளாளர் சி.மணி நினைவுப்பரிசு வழங்குகிறார். அருகில் தலைமை வகித்த பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி. 
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
வீரத்தாய் நாட்டிய நாடகம்:

சிருஷ்டி அகாடெமி  குழந்தைகளின் கலை நிகழ்ச்சி

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தேசிய சிந்தனைக் கழகத்தின் நகரத் தலைவர் அரிமா. எம்.ராமகிருஷ்ணன் பேசுகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அருள்நிதி டி.ஆர்.முரளிதரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

'வீரத்தாய்' நாட்டிய நாடகத்தில் ஒரு காட்சி.

அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியரின் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம்.

அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமாருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமார் பேசுகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
.


No comments:

Post a Comment