அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Tuesday 4 December 2012

அம்பேத்கருக்கு நிஜமான அஞ்சலி

(படத்தின் மீதி சொடுக்கினால் பெரிதாகத் தெரியும்)
விடுதலை வீரரரும், நமது அரசியல் சாசனத்தின் சிற்பியுமான டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6 ம்  தேதி வருகிறது அதையொட்டி, அறம்  அறக்கட்டளை- திருப்பூர்  ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

சுவாமி விவேகானந்தா ஐ.ஏ.ஸ். அகாடமி, கோவை,  சங்கல்ப்  ஐ.ஏ.எஸ். போரம்- புதுடில்லி  அமைப்புகளுடன் இணைந்து, அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாகவும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாகவும், மாணவர்களுக்கான் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு துவக்க விழாவை இந்நாளில்  அறம் அறக்கட்டளை நடத்துகிறது.

திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை அறிவியல் கல்லூரியில் 06.12.2012, வியாழக்கிழமை, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். பார்க் கலை அறிவியல் கல்லூரியின் செயலர் பி.ரகுராஜன், சி.பி.சி. பேஷன்ஸ் நிறுவன இயக்குனர் டி.ஆர். விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.

கோவை ஐ.ஏ.எஸ். அகாடமியின்  செயலர் ந.பாரதி ஐ.ஏ.எஸ். பயிற்சியைத் துவக்கிவைத்து, பயிற்சியின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார். சென்னையைச் சார்ந்த தனித்திறன் பயிற்சியாளர் ஜா.ராஜகோபாலன் சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்வின் இறுதியாக, திருப்பூர் வழக்கறிஞர் அ.பார்த்திபன் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி,  நிறைவுரையாற்றுகிறார். அறம்  அறக்கட்டளை  உறுப்பினர் வீர.ராஜமாணிக்கம் நன்றி கூறுகிறார்.  இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.


காண்க: அறம் அறக்கட்டளை 
.

Saturday 20 October 2012

அறம் அறக்கட்டளை நடத்தும் எழுத்தறிவித்தல் விழா

அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்

அறம் அறக்கட்டளை, திருப்பூர்
சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர், திருப்பூர்

இணைந்து நடத்தும்
'எழுத்தறிவித்தல்' விழா
*****
நாள்   : விஜயதசமி நன்னாள், 24.10.2012, புதன்கிழமை.
நேரம்  : காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை.
இடம்  : அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோவில், திருப்பூர்.
தலைமை       : திரு. M.ரத்தினம் செட்டியார்,
              தலைவர், அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம், திருப்பூர்.

முன்னிலை     : திரு. சி.பாலமுருகன் M.A. M.Ed.,
              செயல் அலுவலர், விஸ்வேஸ்வரர் கோவில்.

             திரு. தரணி மணி,
               தலைவர், சக்தி மாரியம்மன் டிரஸ்ட், எம்.ஆர்.நகர், திருப்பூர்

வரவேற்புரை : திரு. K .சிவகுமார், அறம் அறக்கட்டளை, திருப்பூர்

ஆசியுரை         : பூஜ்யஸ்ரீ சுவாமினி குகப்பிரியானந்த சரஸ்வதி,
               நிறுவனர், ஸ்ரீ தபோவனம், அலகுமலை.

ஈஷாவாஸ்ய உபநிடதம்- ஓர் அறிமுகம்' 

நூல் வெளியீடு:
 
திரு. சூத்ரதாரி. கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர்.
 
எழுத்தறிவிப்போர்:
திரு. ஜெயமோகன், எழுத்தாளர், நாகர்கோவில்.
திரு.S.N.நடராஜ குருக்கள், அர்ச்சகர், விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர்.
 
திரு. அரவிந்தன் நீலகண்டன், ஆராய்ச்சியாளர், நாகர்கோவில்.
பேராசிரியர் திரு. .கனகசபாபதி, இயக்குநர், நகரியல் பயிற்சி மையம், கோவை.
நன்றியுரை: திரு. B.சத்யன், அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

அனைவரும் வருக!  அறிவமுதம் பெறுக!
***** 
அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்  
புறத்த புகழும் இல.                                                 - திருக்குறள் (4 -39)


விஜயதசமி சிறப்புச் சொற்பொழிவு
நாள்  : விஜயதசமி நன்னாள், 24.10.2012, புதன்கிழமை.
நேரம் : மாலை 5 .00 மணி முதல் 7.30 மணி வரை.
இடம் : சன்மார்க்க சங்க வளாகம்,  

                 கருவம்பாளையம், திருப்பூர்.
தலைமை : திரு. சக்தி M.சுப்பிரமணியம்,
           தலைவர், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்,

முன்னிலை : திரு. K.P.K .பாலசுப்ரமணியம்,
             ஒருங்கிணைப்பாளர், சன்மார்க்க சங்கம், திருப்பூர்.
 
வரவேற்புரை: வழக்குரைஞர் திரு. A.பார்த்திபன்,
            அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

சொற்பொழிவாளர்கள்:

திரு. ஜெயமோகன்
     எழுத்தாளர், நாகர்கோவில்.
திரு. அரவிந்தன் நீலகண்டன்,  
        ஆராய்ச்சியாளர், நாகர்கோவில்.
திரு. ஜடாயு,  
         எழுத்தாளர், பெங்களூர்.
நன்றியுரை: ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன்,
               தலைவர், அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

அனைவரும் வருக! அற அமுதம் பெறுக!
தொடர்புக்கு.... 
 அறம் அறக்கட்டளை, திருப்பூர். 
 36 / 24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, குமரன் சாலை, திருப்பூர் – 641601. 
போன்: 94437 04858, 72008 55666, 98940 31101, மின்னஞ்சல்: aramtirupurgmail.com
 

Thursday 13 September 2012

புதிய அமைப்பு உதயம்


அன்பார்ந்த நண்பர்களுக்கு,

வணக்கம்.

சுதந்திர தினத் திருவிழா திருப்பூரில் நாம் நினைத்தது போல ஒரு எழுச்சியை உருவாக்கியுள்ளது. அதுபோலவே, நாட்டுநலன் கருதும் பணிகளுக்கான நமது சிந்தனைகளுக்கு புத்துணர்வும் ஊட்டியுள்ளது.

இந்த நிகழ்வுக்காக நாம் பலநூறு பேரைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். பலர் புதிய நண்பர்களாயினர். பலர் நம்முடன் இணைந்து பணியாற்றினர். பலர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நம்மை வாழ்த்தினர். எந்த ஒரு பெரும் செயலும் அனைவரது ஒத்துழைப்பாலும் ஒருங்கிணைப்பாலும்  தான் சாத்தியமாகிறது.  திருப்பூரில் நாம் நடத்திய சுதந்திர தினத் திருவிழா இதை நிரூபித்திருக்கிறது.

இந்த நிகழ்வுக்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளும் கிடைத்த தொடர்புகளும் வீணாகிவிடக் கூடாது என்ற சிந்தனையுடன், நமது பணியை ஆண்டுமுழுவதும் தொடரும் உத்தேசத்துடன், விழா சிறக்கப் பாடுபட்ட நண்பர்கள் அனைவரும் ஆலோசித்தோம். அதன் விளைவாக, ஒரு புதிய அமைப்பை நிறுவி, அதன்மூலம் பல அரும்பணிகளை நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறோம்.

கடந்த 12.09.2012 , புதன் கிழமை,  மாலை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிய அமைப்பின் பெயராக 'திருப்பூர் அறம் அறக்கட்டளை' முடிவானது. இதன் தலைவராக ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிந்தனைகளை வலுப்படுத்துவது, சமூக, அரசியல் விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவது, கல்வித்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கப் பாடுபடுவது, இளைஞர்  சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல குறிக்கோள்களுடன் இந்த அமைப்பைத் துவங்கி உள்ளோம்.

இதுகுறித்த விரிவான தகவல்கள் விரைவில் இத்தளத்தில் வெளியிடப்படும்.

இந்த அமைப்பில் இணைய விரும்புவோர் திரு. C.சிவசுப்பிரமணியன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 94437 04858

.

Tuesday 11 September 2012

IDCC தொடர்பு எண்கள்


ஆடிட்டர் C.சிவசுப்பிரமணியன்
94437 04858

S.நாராயணன்
98940 31101

வீர.ராஜமாணிக்கம்
7200855666

ஆடிட்டர் V.விட்டல்ராஜன்
94430 41609

R.அண்ணாதுரை
93630 11783

T.R.விஜயகுமார்
98846 71005

Y.S.ரஞ்சித்
98429 30969


N.பாரதி
96553 09334


K.சிவகுமார்
98949 33877


C.மணி
98946 29074


K.சிவா
82200 32005


B.சத்யன்
96555 64708

D.ஹரிகிருஷ்ணன்

7502289697


S.ராஜேஷ்
95782 29282


வ.மு.முரளி
99526 79126

.

Monday 3 September 2012

இணைந்த கரங்களுக்கு நன்றி


சுதந்திர தின விழாவை மக்கள் விழாவாக நாள் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தவுடன், திருப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளை தொடர்பு கொண்டோம்.

சில இடங்களில் புறக்கணிப்பு பதிலாகக் கிடைத்தாலும், பெருவாரியான இடங்களில் நல்லாதரவு கிடைத்தது. பலர் தாங்களை உளப்பூர்வமாக இணைத்துக்கொண்டனர்;  சிலர் ஆதரவளிப்பதாகக் கூறினார்; சிலர் பொருளாதாரரீதியான உதவிகளையும் செய்தனர்.

அவர்களது உறுதுணையால் தான் திருப்பூரில் அமைதியான முறையில் ஒரு சாதனையை எங்களால் படைக்க முடிந்தது. இந்நேரத்தில் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

திருப்பூர்- சுதந்திர தினத் திருவிழா- 2012 ல் எங்களுடன் இணைந்த கரங்களின் பட்டியல் இது...

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி

முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பு

தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா)

பின்னலாடைத் துணி தயாரிப்பாளர் சங்கம் (நிட்மா)

திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா)

திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரிண்டர்ஸ் சங்கம் (டெக்பா)

திருப்பூர் சாயஆலை உரிமையாளர் சங்கம்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா)

திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் சங்கம்

சிறு, குறு பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சிஸ்மா)

திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கம்

காந்திய மக்கள் இயக்கம்

ஊழல் எதிர்ப்பு இயக்கம் (ஐஏசி)

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு

தேசிய சிந்தனைக் கழகம்

தேசிய வாக்காளர் பேரவை

திருப்பூர் சேவா சமிதி

முயற்சி மக்கள் இயக்கம்

சபர்மதி சமூக சேவா சங்கம்

வளம்

நொய்யல் பாதுகாப்புக் குழு

சண்முகானந்த சங்கீத சபா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்

திருப்பூர் கம்பன் கழகம்

வெற்றித் தமிழர் பேரவை

திருப்பூர் தமிழ் சங்கம்

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கம்

பதியம் இலக்கிய வட்டம்

அறம் வாசகர் வட்டம்

உலகத் திருக்குறள் பேரவை

திருக்கோவில் பக்தர் பேரவை

ஸ்ரீவாரி அறக்கட்டளை

அருள்நெறி திருக்கூட்டம்

பாகவத சப்தாகிக் குழு

குர்பானி அறக்கட்டளை

ஜெயின் அறக்கட்டளை

வாழும் கலை அமைப்பு

மனவளக் கலை மன்றம்

விவேகானந்த கேந்திரா

செஞ்சிலுவை சங்கம்

SAVE

விடியல் சமூகநல இயக்கம்

பி.குழந்தைவேலு முதலியார்- நாச்சம்மாள் அறக்கட்டளை

திருப்பூர் கபடி கல்வி அறக்கட்டளை

மணமாலை அறக்கட்டளை

ஆத்மா அறக்கட்டளை

காமாட்சியம்மன் அறக்கட்டளை

வெற்றி குடியிருப்போர் நலச் சங்கம்

விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

நர்சரி பள்ளிகள் கூட்டமைப்பு

கிரீன் அண்ட் கிளீன்

சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா

பிரேரணா அறக்கட்டளை

திருப்பூர் கல்வி அறக்கட்டளை

பாரதியார் குருகுலம்

மக்கள் சேவை மையம்

பாஞ்சஜன்யா- மாணவர் பன்முகத்திறன் வளர்ச்சி மையம்

சுவாமி விவேகானந்தா பவுண்டேஷன் ஐ.ஏ.எஸ். அகாடமி

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் 

தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கம்

இன்னர்வீல் சங்கம்

சிருஷ்டி அகாடெமி
.

Friday 31 August 2012

சுதந்திர தினவிழா- இரவு நிகழ்வுகளின் படங்கள்

சுதந்திர தின நிறைவு விழா:

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்


தினமணி ஆசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கிறார் தினமணி குடும்பத்தைச் சேர்ந்த பி.ஒய்.தட்சிணாமூர்த்தி.

ஈரோடு சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூலை நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலம் வெளியிட, சக்தி எம். சுப்பிரமணியம் பெறுகிறார். அருகில் நூலாசிரியர் சு.சண்முகவேல்.

டி.ஏ.ஷான் தயாரித்த 'தேசபக்திப்பாடல்கள்'  குறுந்தகடை சக்தி எம்.சுப்பிரமணியம் வெளியிட, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதி பெறுகிறார்.

நிகழ்ச்சியில்  முன்னிலை  வகித்து  பேசுகிறார்,    திருப்பூர்  திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம்.

விஜயாபுரம், குரும்பபாளையத்தைச் சேர்ந்த முதியவர் பி.சந்திரன் சுதந்திர தின விழா துவங்கியது முதல் டவுன்ஹாலில் மகாத்மா காந்தி வேடத்தில் நின்றபடி அனைவரையும் வரவேற்றார். அவரை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கௌரவித்தார்.

சுதந்திர தினத் திருவிழாவின் முத்தாய்ப்பாக, விழாப் பேருரை ஆற்றுகிறார் 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

தினமணி  ஆசிரியருக்கு   தனது  'உடையும்  இந்தியா'  புத்தகத்தை  நினைவுப் பரிசாக  வழங்குகிறார்  எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்.

தினமணி  ஆசிரியர்  கே.வைத்தியநாதனுக்கு   நினைவுப் பரிசு  வழங்குகிறார்  IDCC  நிர்வாகியான ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

திருப்பூர்  திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியத்துக்கு IDCC நிர்வாகியும் திருப்பூர் அறம் அறக்கட்டளை பொறுப்பாளருமான வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதிக்கு IDCC நிர்வாகியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொறுப்பாளருமான எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நேஷனல்  சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலத்துக்கு பத்திரிகையாளர் வ.மு.முரளி நினைவுப்பரிசு வழங்குகிறார்.

விழா நிறைவில் மகிழ்ச்சியுரை ஆற்றுகிறார் IDCC உறுப்பினர் பி. சத்யன்.
காந்திய மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி நடத்திவரும்  கையெழுத்து இயக்கத்தின் அங்கமாக, விழா மேடையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனிடம் கையெழுத்து பெறும் காந்திய மக்கள் இயக்க நண்பர்கள்.

சுதந்திர தினத் திருவிழா இனிதே நிறைவடைந்த களிப்பில், தினமணி ஆசிரியருடன் விழாக்குழுவினர்.

சுதந்திர தினவிழா- மாலை நிகழ்வுகளின் படங்கள் - 2

சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா, 
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா:

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன்.

கரடிவாவி அருகில் உள்ள லட்சுமி நாயக்கன் பாளையத்தில் முதியோர் இல்லம் நடத்தும் ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தா நினைவு வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை நிர்வாகி அன்பு கங்காதரனை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.
முருகம்பாளையத்திலும் கோதபாளையத்திலும்  இயங்கும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியின் பொறுப்பாளர்கள் கண்ணன், ரமேஷ் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


திருமுருகன் பூண்டியில் அன்பு இல்லம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்தும் விவேகானந்த கேந்திரா நிர்வாகி வாசவியை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


திருப்பூர் இஸ்லாமியர்களிடையே நற்பணி ஆற்றிவரும் குர்பானி அறக்கட்டளை செயலாளர் எம்.அகமது பைசலை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.

அலகுமலையில் இயங்கும் பாரதியார் குருகுல நிர்வாகி எஸ்.ராஜேஷை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


அமராவதிபாளையத்தில்  இயங்கும் மகாத்மா காந்தி கருணை இல்லத்தின் நிர்வாகிகள் செந்தில்வேல், விஜயகுமார் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.
 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.



ஓவியப் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன்.

கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறார் மேகலா குழும நிறுவனங்களின் தலைவர் சி.சுப்பிரமணியம்.


போட்டியில் வென்ற கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன்.

போட்டியில் வென்ற கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்குகிறார் திருப்பூர் தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் வி.பொன்னுசாமி.

திருப்பூர் துணை மேயர் எஸ்.குணசேகரனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி. எம்.சுப்பிரமணியம்.

தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்க செயலாளர் வி.பொன்னுசாமிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் IDCC நிர்வாகி ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

தொழிலதிபர் மேகலா சி.சுப்பிரமணியனுக்கு IDCC நிர்வாகி எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

சுதந்திர தினத் திருவிழா  நிகழ்ச்சியில் பெரும்  திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள்.

.

சுதந்திர தினவிழா - மாலை நிகழ்வுகளின் படங்கள்

கருத்தரங்கம் - கல்வியும் பண்பாடும்:

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி பேசுகிறார்.
கருத்தரங்கில் பேசுகிறார் கிருஷ்ண. ஜெகநாதன்.

கருத்தரங்கில் பேசுகிறார் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன்.

கருத்தரங்கில் பேசிய தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் கிருஷ்ண ஜெகநாதனுக்கு IDCC நிர்வாகி நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.   
கருத்தரங்கில் பேசிய ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டனுக்கு திருப்பூர் அறம் அறக்கட்டளை நிர்வாகி வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த விவேகானந்தா பள்ளி செயலர் எக்ஸ்லான் கே.ராமசாமிக்கு மகாகவி வித்யாலயா பள்ளி தாளாளர் சி.மணி நினைவுப்பரிசு வழங்குகிறார். அருகில் தலைமை வகித்த பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி. 
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
வீரத்தாய் நாட்டிய நாடகம்:

சிருஷ்டி அகாடெமி  குழந்தைகளின் கலை நிகழ்ச்சி

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தேசிய சிந்தனைக் கழகத்தின் நகரத் தலைவர் அரிமா. எம்.ராமகிருஷ்ணன் பேசுகிறார்.

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அருள்நிதி டி.ஆர்.முரளிதரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

'வீரத்தாய்' நாட்டிய நாடகத்தில் ஒரு காட்சி.

அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியரின் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம்.

அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமாருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமார் பேசுகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.
.