அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Thursday 13 September 2012

புதிய அமைப்பு உதயம்


அன்பார்ந்த நண்பர்களுக்கு,

வணக்கம்.

சுதந்திர தினத் திருவிழா திருப்பூரில் நாம் நினைத்தது போல ஒரு எழுச்சியை உருவாக்கியுள்ளது. அதுபோலவே, நாட்டுநலன் கருதும் பணிகளுக்கான நமது சிந்தனைகளுக்கு புத்துணர்வும் ஊட்டியுள்ளது.

இந்த நிகழ்வுக்காக நாம் பலநூறு பேரைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். பலர் புதிய நண்பர்களாயினர். பலர் நம்முடன் இணைந்து பணியாற்றினர். பலர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நம்மை வாழ்த்தினர். எந்த ஒரு பெரும் செயலும் அனைவரது ஒத்துழைப்பாலும் ஒருங்கிணைப்பாலும்  தான் சாத்தியமாகிறது.  திருப்பூரில் நாம் நடத்திய சுதந்திர தினத் திருவிழா இதை நிரூபித்திருக்கிறது.

இந்த நிகழ்வுக்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளும் கிடைத்த தொடர்புகளும் வீணாகிவிடக் கூடாது என்ற சிந்தனையுடன், நமது பணியை ஆண்டுமுழுவதும் தொடரும் உத்தேசத்துடன், விழா சிறக்கப் பாடுபட்ட நண்பர்கள் அனைவரும் ஆலோசித்தோம். அதன் விளைவாக, ஒரு புதிய அமைப்பை நிறுவி, அதன்மூலம் பல அரும்பணிகளை நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறோம்.

கடந்த 12.09.2012 , புதன் கிழமை,  மாலை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிய அமைப்பின் பெயராக 'திருப்பூர் அறம் அறக்கட்டளை' முடிவானது. இதன் தலைவராக ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிந்தனைகளை வலுப்படுத்துவது, சமூக, அரசியல் விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவது, கல்வித்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கப் பாடுபடுவது, இளைஞர்  சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல குறிக்கோள்களுடன் இந்த அமைப்பைத் துவங்கி உள்ளோம்.

இதுகுறித்த விரிவான தகவல்கள் விரைவில் இத்தளத்தில் வெளியிடப்படும்.

இந்த அமைப்பில் இணைய விரும்புவோர் திரு. C.சிவசுப்பிரமணியன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 94437 04858

.

Tuesday 11 September 2012

IDCC தொடர்பு எண்கள்


ஆடிட்டர் C.சிவசுப்பிரமணியன்
94437 04858

S.நாராயணன்
98940 31101

வீர.ராஜமாணிக்கம்
7200855666

ஆடிட்டர் V.விட்டல்ராஜன்
94430 41609

R.அண்ணாதுரை
93630 11783

T.R.விஜயகுமார்
98846 71005

Y.S.ரஞ்சித்
98429 30969


N.பாரதி
96553 09334


K.சிவகுமார்
98949 33877


C.மணி
98946 29074


K.சிவா
82200 32005


B.சத்யன்
96555 64708

D.ஹரிகிருஷ்ணன்

7502289697


S.ராஜேஷ்
95782 29282


வ.மு.முரளி
99526 79126

.

Monday 3 September 2012

இணைந்த கரங்களுக்கு நன்றி


சுதந்திர தின விழாவை மக்கள் விழாவாக நாள் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தவுடன், திருப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளை தொடர்பு கொண்டோம்.

சில இடங்களில் புறக்கணிப்பு பதிலாகக் கிடைத்தாலும், பெருவாரியான இடங்களில் நல்லாதரவு கிடைத்தது. பலர் தாங்களை உளப்பூர்வமாக இணைத்துக்கொண்டனர்;  சிலர் ஆதரவளிப்பதாகக் கூறினார்; சிலர் பொருளாதாரரீதியான உதவிகளையும் செய்தனர்.

அவர்களது உறுதுணையால் தான் திருப்பூரில் அமைதியான முறையில் ஒரு சாதனையை எங்களால் படைக்க முடிந்தது. இந்நேரத்தில் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

திருப்பூர்- சுதந்திர தினத் திருவிழா- 2012 ல் எங்களுடன் இணைந்த கரங்களின் பட்டியல் இது...

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி

முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பு

தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா)

பின்னலாடைத் துணி தயாரிப்பாளர் சங்கம் (நிட்மா)

திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா)

திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பிரிண்டர்ஸ் சங்கம் (டெக்பா)

திருப்பூர் சாயஆலை உரிமையாளர் சங்கம்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா)

திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் சங்கம்

சிறு, குறு பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சிஸ்மா)

திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கம்

காந்திய மக்கள் இயக்கம்

ஊழல் எதிர்ப்பு இயக்கம் (ஐஏசி)

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு

தேசிய சிந்தனைக் கழகம்

தேசிய வாக்காளர் பேரவை

திருப்பூர் சேவா சமிதி

முயற்சி மக்கள் இயக்கம்

சபர்மதி சமூக சேவா சங்கம்

வளம்

நொய்யல் பாதுகாப்புக் குழு

சண்முகானந்த சங்கீத சபா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்

திருப்பூர் கம்பன் கழகம்

வெற்றித் தமிழர் பேரவை

திருப்பூர் தமிழ் சங்கம்

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கம்

பதியம் இலக்கிய வட்டம்

அறம் வாசகர் வட்டம்

உலகத் திருக்குறள் பேரவை

திருக்கோவில் பக்தர் பேரவை

ஸ்ரீவாரி அறக்கட்டளை

அருள்நெறி திருக்கூட்டம்

பாகவத சப்தாகிக் குழு

குர்பானி அறக்கட்டளை

ஜெயின் அறக்கட்டளை

வாழும் கலை அமைப்பு

மனவளக் கலை மன்றம்

விவேகானந்த கேந்திரா

செஞ்சிலுவை சங்கம்

SAVE

விடியல் சமூகநல இயக்கம்

பி.குழந்தைவேலு முதலியார்- நாச்சம்மாள் அறக்கட்டளை

திருப்பூர் கபடி கல்வி அறக்கட்டளை

மணமாலை அறக்கட்டளை

ஆத்மா அறக்கட்டளை

காமாட்சியம்மன் அறக்கட்டளை

வெற்றி குடியிருப்போர் நலச் சங்கம்

விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு

நர்சரி பள்ளிகள் கூட்டமைப்பு

கிரீன் அண்ட் கிளீன்

சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா

பிரேரணா அறக்கட்டளை

திருப்பூர் கல்வி அறக்கட்டளை

பாரதியார் குருகுலம்

மக்கள் சேவை மையம்

பாஞ்சஜன்யா- மாணவர் பன்முகத்திறன் வளர்ச்சி மையம்

சுவாமி விவேகானந்தா பவுண்டேஷன் ஐ.ஏ.எஸ். அகாடமி

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் 

தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கம்

இன்னர்வீல் சங்கம்

சிருஷ்டி அகாடெமி
.