அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Monday 30 July 2012

சுதந்திர விழாவில் சாதனைச் சிறுவன்

சு.மகிழன் பரிதி

திருப்பூர் நகர மண்டபத்தில் ஆக. 15 அன்று நிகழ உள்ள சுதந்திர தினத் திருவிழாவில் காலை 11.00 மணி முதல் 11.30 மணிவரை, 'வளரும் சிகரம்' செல்வன் சு.மகிழன் பரிதி குழுவினரின் தேசபக்திப்பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மூன்று வயது முதல் மேடைகளில் பாடிவரும் ஞானக் குழந்தையான மகிழன் பரிதியின் பெற்றோரும் இசை ஆர்வலர்கள்.  இவரது தந்தை சுபாஷ் திருப்பூர் கல்வி அறக்கட்டளை பள்ளியின் நிர்வாக இயக்குனர்; தாய் சுப்புலட்சுமி ஸ்வரவாணி கலாலயா இசைப்பள்ளியின் நிர்வாகி. தற்போது ஊத்துக்குளியில் உள்ள வேதாந்தா அகாடமி பள்ளியில் மூன்றாவது பயிலும் மகிழன் பரிதி, தனது குழுவினருடன் தேசபக்திப் பாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

'வளரும் சிகரம்', 'சாதனைச் சிறுவன்', 'அகஸ்தியர் விருது' ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள மகிழன் பரிதி (8)  திருப்பூர் நகரைச் சேர்ந்தவர் என்பது நமக்குப் பெருமை. இதுவரை 70 மேடை நிகழ்சிகளில் பாடியுள்ள பரிதி, மூவர் தேவாரம், திருப்புகழ் பாடல்களை குறுந்தகடுகளுக்காக (CD) பாடி இருக்கிறார்.

இவரது இணையதளம்: மகிழன் பரிதி டாட் காம்

.

Friday 27 July 2012

கல்லூரி மாணவர்களுக்கு இரு போட்டிகள்


சுதந்திர தினத் திரு விழாவை முன்னிட்டு, திருப்பூர் வட்டார கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அது பற்றிய விபரம்:

கட்டுரைப் போட்டி:

1 . தலைப்பு: தேசிய வளங்களும் நாட்டு முன்னேற்றமும்

2 .  கட்டுரையை 8 பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து (A 4 அளவு) எமது முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  முகவரி:
          S.நாராயணன்,
         சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு
         41 , சித்தப்பா அவன்யூ,
         ராயபுரம் பிரதான சாலை,
         திருப்பூர் - 641 601.

3 . தாளின் ஒருபக்கம் மட்டுமே கட்டுரை தட்டச்சு செய்யப்பட வேண்டும். பின்புறம் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவரின் பெயரை எழுத வேண்டும்.

4 . கல்லூரி முதல்வரின் சான்று ஒப்பத்துடன் கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டும். உடன் மாணவரின் முழு விபரமும் இணைக்கப்பட வேண்டும்.

5 . ஒரு கல்லூரியில் இருந்து எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் போட்டியில் பங்கேற்கலாம்.

6 . கட்டுரைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: ஆக. 10.

7 . நடுவர்கள் தேர்வு செய்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் உண்டு.


------------------------------------------------------------------------------------- 


பேச்சுப் போட்டி:

1 . தலைப்பு: சும்மாவா வந்தது சுதந்திரம்?

2 . கால அவகாசம்: 10 நிமிடங்கள்.

3 . கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், கல்லூரி முதல்வர் ஒப்புதலுடன் தங்கள் பெயரை தொலைபேசியில் ஆக. 9 ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

4 . ஒரு கல்லூரியில் இருந்து 10 மாணவ  மாணவியர் மட்டுமே பங்கேற்கலாம்.

5 . போட்டி நடைபெறும் இடம்:  பார்க் கலை அறிவியல் கல்லூரி, சின்னக்கரை, திருப்பூர்.

6.  போட்டி நடைபெறும் நாள்: 10 .08 .2012 , வெள்ளிக்கிழமை, மதியம்  12.00 மணி.

7 .  போட்டியில் தேர்வு செய்யப்படும் முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


-------------------------------------------------------------------------------------

 
மேற்படி போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: வீர. ராஜமாணிக்கம் - 72008 55666
                         கே .சிவகுமார் - 98949 33877


.

Wednesday 25 July 2012

திருப்பூர் பொதுநல இயக்கங்களுக்கு வேண்டுகோள்

கொடி காக்க இன்னுயிர் ஈந்து
திருப்பூரை நிலைநிறுத்திய குமரன்

 அன்புடையீர்,

வணக்கம்.

திருப்பூரில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், சேவை அமைப்புகள் இணைந்து 'சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு' அமைத்து இந்த ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாட உள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 15, புதன்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, திருப்பூர் டவுன்ஹாலில் தொடர் நிகழ்ச்சிகளுடன் இதனை ஒரு திருவிழாவாக நடத்த உத்தேசித்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்.

அன்று காலையில், நாளைய இந்தியா சிறக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்யும் விதமாக கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. இடையே, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

மாலையில், தன்னலமற்ற பொதுநல சேவை செய்யும் நல்லோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசளிக்கவும் உள்ளோம்.

இந்த நிகழ்வுகளில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், துணை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பலதுறை வல்லுனர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.

நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தினத் திருவிழாவை சிறப்பாக நடத்துவோம்!
திருப்பூரின் சிறப்பை மேலும் உயர்த்துவோம்!

நன்றி.

அன்புடன்,
ஒருங்கிணைப்புக் குழுவினர் 
.

பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின விழா போட்டிகள்



சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் வட்டார   உயர்நிலைப் பள்ளிகள்,  மேல்நிலைப் பள்ளிகளில்   பயிலும் மாணவ மாணவிகளுக்கு  கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்த உள்ளோம். 
அது குறித்த விபரம்:

ஓவியப் போட்டிகள்:
  • 6 , 7 , 8  வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    மரம் வளர்ப்போம்
  • 9 , 10 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    மனிதநேயம் காப்போம்
  • 11 , 12 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள்
மேற்கண்ட தலைப்பில் ஓவியம் (கோட்டுப்படம் அல்லது வண்ணப்படம்) வரைய வேண்டும்.

போட்டி நடைபெறும் நாள்: 10.08.2012, வெள்ளிக்கிழமை, காலை 10.00 மணி

இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அம்மாபாளையம், திருப்பூர்.

விதிமுறைகள்:

1 . ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், 6, 7, 8 வகுப்புக்கள், 9,10 வகுப்புக்கள், 11,12 வகுப்புக்கள் என  ஒவ்வொரு பிரிவிலும் தலா இருவர் பங்கேற்கலாம்.

2. பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரின் பரிந்துரையுடன் போட்டிக்கு வர வேண்டும்.

3 . ஓவியப் போட்டிக்கு A 4 தாளில் படம் வரைய வேண்டும்.

4.  ஓவியப் போட்டி கால அவகாசம்: 90 நிமிடங்கள் 

------------------------------------------------------------------

கட்டுரைப் போட்டிகள்:
  • 6, 7, 8  வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்காண தலைப்பு:

    சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு.
  • 9, 10 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    தேசிய ஒருமைப்பாட்டில் மாணவரின் பங்கு.
  • 11, 12 வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான தலைப்பு:

    வளமான இந்தியாவுக்கு எனது ஆலோசனைகள்.

விதிமுறைகள்:


1. கட்டுரைப் போட்டிக்கு 6,7,8  வகுப்பு மாணவர்கள்  A 4  தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.  9, 10, 11,12 வகுப்பு மாணவர்கள் A 4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

2.  கட்டுரை எழுதும் தாளின் பின்புறம் மாணவர்/ மாணவி பெயர் எழுதப்பட வேண்டும்.

3. கட்டுரைகளை மாணவர்கள் போட்டிக்கான விதிமுறைப்படி எழுதி,  தங்கள் பள்ளி  தலைமை ஆசிரியர், முதல்வரிடமே ஆக. 9 ம் தேதிக்குள்  அளிக்க வேண்டும். அந்தக் கட்டுரைகளை போட்டி அமைப்புக் குழுவினர் பள்ளிக்கே வந்து பெற்றுக்கொள்வர்.

4. பள்ளித் தலைமை ஆசிரியர் / முதலவர் இக்கட்டுரைகளை பரிந்துரைத்து  அளிக்க வேண்டும்.

------------------------------------------------------------------ 


பரிசும் சான்றிதழும்:

1. அரசு பள்ளி மாணவர்களுக்கு தனிப் பிரிவிலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு தனிப் பிரிவிலும் படைப்புகள் பரிசீலிக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்படும்.

2. ஒவ்வொரு குழுப் பிரிவிலும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மூவருக்கு  பரிசுகள் வழங்கப்படும்.

3. போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

4.  நடுவர் குழுவினரின் முடிவே இறுதியானது.


தொடர்புக்கு:
  • திரு. Y.S.ரஞ்சித் - 98429 30969
  • திரு. K.தனசேகரன் - 99429 56555
  • திரு. S.நாராயணன் - 98940 31101

.

Monday 23 July 2012

சுதந்திர தின விழா கருத்தரங்குகள் - அறிவிப்பு



அன்புள்ள திருப்பூர் வட்டார நண்பர்களுக்கு,

வணக்கம்.

சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் நகர மண்டபத்தில் ஆக. 15 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,  நான்கு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.


  • கல்வியும் பண்பாடும்.
  • இயற்கை வளங்களும் சுகாதாரமும்
  • தொழிலும் பொருளாதாரமும்
  • அரசியலும் நிர்வாகமும் 
 
ஆகிய தலைப்புகளில் பல்துறை வல்லுனர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் தலா ஒன்றரை மணி நேர அளவில் திட்டமிடப்பட்டுள்ளன. 

இக்கருத்தரங்குகளில் கருத்துகளை முன்வைத்து விவாதிக்க விரும்புவோர் முன்கூட்டியே எங்களிடம் பதிவு செய்துகொண்டால், நிகழ்ச்சியை நேர்த்தியாக வடிவமைக்க இயலும்.

எனவே கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்:

திரு. S.நாராயணன் - 98940 31101

எமது மின்னஞ்சலிலும் நீங்கள் முன்பதிவு செய்யலாம்: tirupuridcc@gmail.com 

கீழுள்ள பின்னூட்டப் பெட்டியிலும் உங்கள் வருகையை முன்பதிவு செய்து, கருத்தரங்கு சிறக்க நீங்கள் உதவலாம்.

.

எமது நோக்கம்

திருப்பூர் குமரன் நினைவுச் சின்னம்
 
அன்னை பாரதத்தின் அடிமை விலங்கை தகர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கி 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 மற்றும் ஒரு நாளாகவே கழிகிறது. எண்ணற்ற தியாகியரின் குருதியும் தியாகமும் கண்ணீரும் சிந்திப் பெற்ற சுதந்திரம்  இந்த மண்ணில் விதையானதா, வீணானதா? என்பது பற்றி ஒரு மீள்பார்வை பார்க்கவும், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும், சுதந்திர தினத்தை ஒரு திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம்.
 
திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், சேவை அமைப்புகள் இணைந்து அமைத்துள்ள 'திருப்பூர் சுதந்திர தின திருவிழா ஒருங்கிணைப்புக் குழு' சார்பில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  வரும் 2012, ஆகஸ்ட் 15, புதன் கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, திருப்பூர் நகர மண்டபத்தில் (டவுன் ஹால்) இதற்கான விழா நடத்த ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுகின்றன.
 
இந்த விழா ஏற்பாடுகளில் இணைந்து பங்கேற்குமாறு கரம் கூப்பி அனைவரையும் அழைக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து, நாட்டுப்பற்றை பரப்பும் இவ்விழாவை சிறப்பிப்போம். இந்த வலைப்பூ, திருப்பூரில் நடக்கவுள்ள சுதந்திர தின திருவிழா தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு கருவியாக இயங்கும்.
 
வாருங்கள், தேச பக்தர்கள் ஒருங்கிணைவோம்! நாட்டைக் காக்கவும், சீர்திருத்தவும் முயல்வோம்!
 
பாரத அன்னை வெல்க!
 
.