அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Monday 23 July 2012

எமது நோக்கம்

திருப்பூர் குமரன் நினைவுச் சின்னம்
 
அன்னை பாரதத்தின் அடிமை விலங்கை தகர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துவங்கி 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 மற்றும் ஒரு நாளாகவே கழிகிறது. எண்ணற்ற தியாகியரின் குருதியும் தியாகமும் கண்ணீரும் சிந்திப் பெற்ற சுதந்திரம்  இந்த மண்ணில் விதையானதா, வீணானதா? என்பது பற்றி ஒரு மீள்பார்வை பார்க்கவும், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும், சுதந்திர தினத்தை ஒரு திருவிழாவாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம்.
 
திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், சேவை அமைப்புகள் இணைந்து அமைத்துள்ள 'திருப்பூர் சுதந்திர தின திருவிழா ஒருங்கிணைப்புக் குழு' சார்பில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  வரும் 2012, ஆகஸ்ட் 15, புதன் கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, திருப்பூர் நகர மண்டபத்தில் (டவுன் ஹால்) இதற்கான விழா நடத்த ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுகின்றன.
 
இந்த விழா ஏற்பாடுகளில் இணைந்து பங்கேற்குமாறு கரம் கூப்பி அனைவரையும் அழைக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து, நாட்டுப்பற்றை பரப்பும் இவ்விழாவை சிறப்பிப்போம். இந்த வலைப்பூ, திருப்பூரில் நடக்கவுள்ள சுதந்திர தின திருவிழா தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஒரு கருவியாக இயங்கும்.
 
வாருங்கள், தேச பக்தர்கள் ஒருங்கிணைவோம்! நாட்டைக் காக்கவும், சீர்திருத்தவும் முயல்வோம்!
 
பாரத அன்னை வெல்க!
 
.
 

No comments:

Post a Comment