அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Thursday 13 September 2012

புதிய அமைப்பு உதயம்


அன்பார்ந்த நண்பர்களுக்கு,

வணக்கம்.

சுதந்திர தினத் திருவிழா திருப்பூரில் நாம் நினைத்தது போல ஒரு எழுச்சியை உருவாக்கியுள்ளது. அதுபோலவே, நாட்டுநலன் கருதும் பணிகளுக்கான நமது சிந்தனைகளுக்கு புத்துணர்வும் ஊட்டியுள்ளது.

இந்த நிகழ்வுக்காக நாம் பலநூறு பேரைத் தொடர்பு கொண்டிருக்கிறோம். பலர் புதிய நண்பர்களாயினர். பலர் நம்முடன் இணைந்து பணியாற்றினர். பலர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நம்மை வாழ்த்தினர். எந்த ஒரு பெரும் செயலும் அனைவரது ஒத்துழைப்பாலும் ஒருங்கிணைப்பாலும்  தான் சாத்தியமாகிறது.  திருப்பூரில் நாம் நடத்திய சுதந்திர தினத் திருவிழா இதை நிரூபித்திருக்கிறது.

இந்த நிகழ்வுக்காக நாம் மேற்கொண்ட முயற்சிகளும் கிடைத்த தொடர்புகளும் வீணாகிவிடக் கூடாது என்ற சிந்தனையுடன், நமது பணியை ஆண்டுமுழுவதும் தொடரும் உத்தேசத்துடன், விழா சிறக்கப் பாடுபட்ட நண்பர்கள் அனைவரும் ஆலோசித்தோம். அதன் விளைவாக, ஒரு புதிய அமைப்பை நிறுவி, அதன்மூலம் பல அரும்பணிகளை நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கிறோம்.

கடந்த 12.09.2012 , புதன் கிழமை,  மாலை திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிய அமைப்பின் பெயராக 'திருப்பூர் அறம் அறக்கட்டளை' முடிவானது. இதன் தலைவராக ஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிந்தனைகளை வலுப்படுத்துவது, சமூக, அரசியல் விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவது, கல்வித்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கப் பாடுபடுவது, இளைஞர்  சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல குறிக்கோள்களுடன் இந்த அமைப்பைத் துவங்கி உள்ளோம்.

இதுகுறித்த விரிவான தகவல்கள் விரைவில் இத்தளத்தில் வெளியிடப்படும்.

இந்த அமைப்பில் இணைய விரும்புவோர் திரு. C.சிவசுப்பிரமணியன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 94437 04858

.

1 comment:

  1. வாழ்த்துக்கள்.

    அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்.

    ReplyDelete