அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Monday 23 July 2012

சுதந்திர தின விழா கருத்தரங்குகள் - அறிவிப்பு



அன்புள்ள திருப்பூர் வட்டார நண்பர்களுக்கு,

வணக்கம்.

சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் நகர மண்டபத்தில் ஆக. 15 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,  நான்கு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.


  • கல்வியும் பண்பாடும்.
  • இயற்கை வளங்களும் சுகாதாரமும்
  • தொழிலும் பொருளாதாரமும்
  • அரசியலும் நிர்வாகமும் 
 
ஆகிய தலைப்புகளில் பல்துறை வல்லுனர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் தலா ஒன்றரை மணி நேர அளவில் திட்டமிடப்பட்டுள்ளன. 

இக்கருத்தரங்குகளில் கருத்துகளை முன்வைத்து விவாதிக்க விரும்புவோர் முன்கூட்டியே எங்களிடம் பதிவு செய்துகொண்டால், நிகழ்ச்சியை நேர்த்தியாக வடிவமைக்க இயலும்.

எனவே கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்:

திரு. S.நாராயணன் - 98940 31101

எமது மின்னஞ்சலிலும் நீங்கள் முன்பதிவு செய்யலாம்: tirupuridcc@gmail.com 

கீழுள்ள பின்னூட்டப் பெட்டியிலும் உங்கள் வருகையை முன்பதிவு செய்து, கருத்தரங்கு சிறக்க நீங்கள் உதவலாம்.

.

1 comment:

  1. bharathiyar gurukulam
    உங்களது அருமையானதொரு பெரு முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள். வெறும் விடுமுறை தினமாக மட்டுமே இன்றைய தலைமுறையினரால் சுதந்திர தினம் அறியப்பட்டு வரப்படுகின்ற காலகட்டத்திலே இது நல்லதொரு மாற்றத்தை இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் யாமில்லை. இப்பெரும் பணியில் அணிலுக்கான பங்கினையாவது செய்ய விரும்புகிறோம் ,அழைக்கவும்.

    ReplyDelete