அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Wednesday 25 July 2012

திருப்பூர் பொதுநல இயக்கங்களுக்கு வேண்டுகோள்

கொடி காக்க இன்னுயிர் ஈந்து
திருப்பூரை நிலைநிறுத்திய குமரன்

 அன்புடையீர்,

வணக்கம்.

திருப்பூரில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், சேவை அமைப்புகள் இணைந்து 'சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு' அமைத்து இந்த ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாட உள்ளோம்.

வரும் ஆகஸ்ட் 15, புதன்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, திருப்பூர் டவுன்ஹாலில் தொடர் நிகழ்ச்சிகளுடன் இதனை ஒரு திருவிழாவாக நடத்த உத்தேசித்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்.

அன்று காலையில், நாளைய இந்தியா சிறக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்யும் விதமாக கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. இடையே, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

மாலையில், தன்னலமற்ற பொதுநல சேவை செய்யும் நல்லோரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளை நடத்தி பரிசளிக்கவும் உள்ளோம்.

இந்த நிகழ்வுகளில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், துணை மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பலதுறை வல்லுனர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் எங்களுடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.

நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தினத் திருவிழாவை சிறப்பாக நடத்துவோம்!
திருப்பூரின் சிறப்பை மேலும் உயர்த்துவோம்!

நன்றி.

அன்புடன்,
ஒருங்கிணைப்புக் குழுவினர் 
.

No comments:

Post a Comment