அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Friday 31 August 2012

சுதந்திர தினவிழா- மாலை நிகழ்வுகளின் படங்கள் - 2

சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா, 
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா:

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன்.

கரடிவாவி அருகில் உள்ள லட்சுமி நாயக்கன் பாளையத்தில் முதியோர் இல்லம் நடத்தும் ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தா நினைவு வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை நிர்வாகி அன்பு கங்காதரனை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.
முருகம்பாளையத்திலும் கோதபாளையத்திலும்  இயங்கும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியின் பொறுப்பாளர்கள் கண்ணன், ரமேஷ் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


திருமுருகன் பூண்டியில் அன்பு இல்லம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்தும் விவேகானந்த கேந்திரா நிர்வாகி வாசவியை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


திருப்பூர் இஸ்லாமியர்களிடையே நற்பணி ஆற்றிவரும் குர்பானி அறக்கட்டளை செயலாளர் எம்.அகமது பைசலை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.

அலகுமலையில் இயங்கும் பாரதியார் குருகுல நிர்வாகி எஸ்.ராஜேஷை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.


அமராவதிபாளையத்தில்  இயங்கும் மகாத்மா காந்தி கருணை இல்லத்தின் நிர்வாகிகள் செந்தில்வேல், விஜயகுமார் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன்.
 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.



ஓவியப் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன்.

கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறார் மேகலா குழும நிறுவனங்களின் தலைவர் சி.சுப்பிரமணியம்.


போட்டியில் வென்ற கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன்.

போட்டியில் வென்ற கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்குகிறார் திருப்பூர் தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் வி.பொன்னுசாமி.

திருப்பூர் துணை மேயர் எஸ்.குணசேகரனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி. எம்.சுப்பிரமணியம்.

தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்க செயலாளர் வி.பொன்னுசாமிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் IDCC நிர்வாகி ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

தொழிலதிபர் மேகலா சி.சுப்பிரமணியனுக்கு IDCC நிர்வாகி எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

சுதந்திர தினத் திருவிழா  நிகழ்ச்சியில் பெரும்  திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள்.

.

No comments:

Post a Comment