அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Wednesday 1 August 2012

நர்சரி பள்ளி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி


சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு,  திருப்பூர் வட்டாரத்தில் உள்ள நர்சரி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுதலைப் போராட்ட வீரர்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். 

ஓவியப் போட்டி விதிமுறைகள்:

1. ஓவியப் போட்டியின் தலைப்பு: விடுதலைப் போராட்ட வீரர்

2 . ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா ஐந்து பேர் பங்கேற்கலாம்.

3 . போட்டியில் பங்கேற்கும் மாணவரின் முழு விபரம் அளிக்கப்பட வேண்டும்.

4. பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரின் பரிந்துரையுடன் மட்டுமே மாணவர்கள் போட்டிக்கு வர வேண்டும்.

5 . ஓவியப் போட்டிக்கு A 4 தாளில் படம் வரைய வேண்டும்.

6. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் மூவருக்கு சிறப்புப் பரிசுகள் உண்டு.

7 . போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

8 . இதன் பரிசளிப்பு விழா சுதந்திர தினத் திருவிழாவில், ஆக. 15, புதன்கிழமை மாலை 6 மணியளவில் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும்.

தொடர்புக்கு: 

திரு. C.மணி, 
முதல்வர்,
மகாகவி பாரதி வித்யாலயா பள்ளி,
திருப்பூர்.
98946 29074

.

No comments:

Post a Comment