அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Monday 13 August 2012

விழா குறித்த பத்திரிகை செய்தி



திருப்பூரில் பொதுநல அமைப்புகள் இணைந்து நடத்தும்
சுதந்திர தினத் திருவிழா 

   
திருப்பூர், ஆக. 12: சுதந்திர தின விழாவை மக்கள் விழாவாகக் கொண்டாடும் நோக்கில்திருப்பூரில் உள்ள ஐம்பதுக்கு  மேற்பட்ட பொதுநல அமைப்புகள் இணைந்து  'சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழுஅமைத்துள்ளனஇக்குழுவின் ஏற்பாட்டில், வரும் ஆக. 15 , புதன் கிழமை, காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திருப்பூர்- டவுன்ஹாலில் சுதந்திர தினத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

விழா நிகழ்ச்சிகள் குறித்த விவரம்:

தேசியக் கொடியேற்றம்: திருப்பூர் டவுன்ஹாலில் 15 ம் தேதி காலை 9 மணியளவில்  தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் (டெக்மா) சங்கத் தலைவர் கே.பி.ஜி.கோவிந்தசாமி தலைமை வகிக்கிறார். டி.கே.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் லிங்க்ஸ் சவுகத் அலி, காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், திருப்பூர்  டம்பிள் டிரையர் சங்க தலைவர் தாமு. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சுதந்திரப் போராட்ட வீரரும், அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் செயல் தலைவருமான தியாகி ஜி. முத்துசாமி தேசியக் கொடியேற்றுகிறார்.  

காலையில் இரு கருத்தரங்குகள்:  அடுத்து காலை 9.30  மணி முதல் 11 மணி வரை, 'தொழிலும் பொருளாதாரமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம்  நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தலைமை வகிக்கிறார். திருப்பூர்  சாய ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகிக்கிறார். நிப்ட்- டீ கல்லூரி தலைவர் ராஜா சண்முகம், கோவையிலுள்ள நகரியல் பயிற்சி மையத்தின் இயக்குனர் பேராசிரியர் . கனகசபாபதி ஆகியோர் பேசுகின்றனர்
.
காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, ‘இயற்கை வளங்களும் சுகாதாரமும்' என்ற தலைப்பில் 2வது கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஆர்.அண்ணாதுரை தலைமை வகிக்கிறார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் என்.எஸ்.பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். ஈரோட்டைச் சேர்ந்த தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வெ.ஜீவானந்தம்திருமானூரைச் சேர்ந்த இயற்கை வாழ்வியல் இயக்கத் தலைவர் டாக்டர் .காசிப்பிச்சை ஆகியோர் பேசுகின்றனர்.

இசை நிகழ்ச்சி: இரு கருத்தரங்குகளின் இடையே, காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, செல்வன் சு.மகிழன் பரிதி குழுவினரின்தேசபக்திப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வழக்குரைஞர் வி.வீரராகவன் தலைமை வகிக்கிறார். குர்பானி அறக்கட்டளை  தலைவர் அகமது பைசல் முன்னிலை வகிக்கிறார்மதியம் 1 மணி முதல் 2 மணிவரை உணவு இடைவேளைஅதன் பிறகு மீண்டும் விழா நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

கலை நிகழ்சிகள்: அடுத்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் கிங் நார்சியஸ் தலைமை வகிக்கிறார். இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் ராஜாத்தி சண்முகம் முன்னிலை வகிக்கிறார். விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் இடம்பெறுகின்றன

மதியம் இரு கருத்தரங்குகள்: அடுத்து மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை 'அரசியலும் நிர்வாகமும்' என்ற தலைப்பில் 3வது கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் நகரத் தலைவர் ஆர்.ஈஸ்வரன் தலைமை வகிக்கிறார். தொழிலதிபர் ஓகே டெக்ஸ்டைல்ஸ் எம். கந்தசாமி முன்னிலை வகிக்கிறார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலு, கோவை வழக்குரைஞர் ஆர்.லட்சுமண நாராயணன் ஆகியோர் பேசுகின்றனர்.

மாலை 4.30 மணி முதல்மணி வரை 'கல்வியும் பண்பாடும்' என்ற  தலைப்பில் 4வது கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி, விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் செயலாளர் எக்ஸ்லான்   கே. ராமசாமி முன்னிலை வகிக்கிறார்தேசிய கல்விக் கழக நிர்வாகி கிருஷ்ண ஜெகநாதன்எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் பேசுகின்றனர்.

சேவை அமைப்புகளுக்கு பாராட்டு விழா: மாலை 6 மணி முதல் 6.45 மணி வரை  சேவை அமைப்புகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர மேயர் .விசாலாட்சி தலைமை வகிக்கிறார். மேகலா குழும நிறுவனங்களின் தலைவர் சி.சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்திருப்பூர் துணை மேயர் எஸ்.குணசேகரன் சேவை அமைப்புகளை கௌரவிக்கிறார். தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தின் (சைமா) செயலாளர் வி.பொன்னுசாமி, சுதந்திர தின விழாவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறார்.

நாட்டிய நாடகம்: அடுத்து, மாலை 6.45 மணி முதல் 7 மணி வரை அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் நகரத் தலைவர்  எம்.ராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர்  டி.ஆர்முரளிதரன் முன்னிலை வகிக்கிறார்.

நிறைவு நிகழ்ச்சி: விழாவின் நிறைவு நிகழ்ச்சிக்கு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதி தலைமை வகிக்கிறார். திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார். ஈரோடு சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' என்ற நூலை  நேஷனல்   சில்க்ஸ் உரிமையாளர் என்அருணாசலம்  வெளியிடுகிறார்விழா நிறைவாக,  ‘தினமணி நாளிழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் சிறப்புரை ஆற்றுகிறார்.

பங்கேற்கும் அமைப்புகள்: இவ்விழாவில் சைமா, திருப்பூர் மாஸ்டர் பிரிண்டர் அசோசியேஷன், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு,   காந்திய மக்கள் இயக்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம், தேசிய சிந்தனைக் கழகம்இன்னர்வீல் சங்கம், சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதி, திருப்பூர் சேவா சமிதி, முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பு.மு...சங்கம்,  குர்பானி அறக்கட்டளை உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன

 இத்தகவலை சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர்கள் ஆடிட்டர் சி.சிவசுப்பிரமனியன், .நாராயணன், வீர.ராஜமாணிக்கம் ஆகியோர் தெரிவித்தனர்.   

-----------------------------------------------------------------------------------------

 .

No comments:

Post a Comment