அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Friday 31 August 2012

சுதந்திர தினவிழா- இரவு நிகழ்வுகளின் படங்கள்

சுதந்திர தின நிறைவு விழா:

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி முத்துசாமி- அவரது மனைவி மயிலம்மாள் தம்பதியினரை தினமணி ஆசிரியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்


தினமணி ஆசிரியருக்கு பொன்னாடை அணிவிக்கிறார் தினமணி குடும்பத்தைச் சேர்ந்த பி.ஒய்.தட்சிணாமூர்த்தி.

ஈரோடு சு.சண்முகவேல் எழுதிய 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூலை நேஷனல் சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலம் வெளியிட, சக்தி எம். சுப்பிரமணியம் பெறுகிறார். அருகில் நூலாசிரியர் சு.சண்முகவேல்.

டி.ஏ.ஷான் தயாரித்த 'தேசபக்திப்பாடல்கள்'  குறுந்தகடை சக்தி எம்.சுப்பிரமணியம் வெளியிட, தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதி பெறுகிறார்.

நிகழ்ச்சியில்  முன்னிலை  வகித்து  பேசுகிறார்,    திருப்பூர்  திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியம்.

விஜயாபுரம், குரும்பபாளையத்தைச் சேர்ந்த முதியவர் பி.சந்திரன் சுதந்திர தின விழா துவங்கியது முதல் டவுன்ஹாலில் மகாத்மா காந்தி வேடத்தில் நின்றபடி அனைவரையும் வரவேற்றார். அவரை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கௌரவித்தார்.

சுதந்திர தினத் திருவிழாவின் முத்தாய்ப்பாக, விழாப் பேருரை ஆற்றுகிறார் 'தினமணி' நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

தினமணி  ஆசிரியருக்கு   தனது  'உடையும்  இந்தியா'  புத்தகத்தை  நினைவுப் பரிசாக  வழங்குகிறார்  எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்.

தினமணி  ஆசிரியர்  கே.வைத்தியநாதனுக்கு   நினைவுப் பரிசு  வழங்குகிறார்  IDCC  நிர்வாகியான ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன்.

திருப்பூர்  திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி எம்.சுப்பிரமணியத்துக்கு IDCC நிர்வாகியும் திருப்பூர் அறம் அறக்கட்டளை பொறுப்பாளருமான வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் கே.பரஞ்சோதிக்கு IDCC நிர்வாகியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொறுப்பாளருமான எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நேஷனல்  சில்க்ஸ் உரிமையாளர் என்.அருணாசலத்துக்கு பத்திரிகையாளர் வ.மு.முரளி நினைவுப்பரிசு வழங்குகிறார்.

விழா நிறைவில் மகிழ்ச்சியுரை ஆற்றுகிறார் IDCC உறுப்பினர் பி. சத்யன்.
காந்திய மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி நடத்திவரும்  கையெழுத்து இயக்கத்தின் அங்கமாக, விழா மேடையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனிடம் கையெழுத்து பெறும் காந்திய மக்கள் இயக்க நண்பர்கள்.

சுதந்திர தினத் திருவிழா இனிதே நிறைவடைந்த களிப்பில், தினமணி ஆசிரியருடன் விழாக்குழுவினர்.

No comments:

Post a Comment