அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Thursday 2 August 2012

சுதந்திர தினத் திருவிழா அழைப்பிதழ்



ஒற்றுமையே வலிமை!                                                                                                                                                                தேசமே தெய்வம்!

சுதந்திர தினத் திருவிழா அழைப்பிதழ்

  
*** 
அன்புடையீர்,

வணக்கம்.

நாடு விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் கனவுகள் பல இன்னமும் நிறைவேறாமலே உள்ளன. நாம் பல துறைகளில் சாதித்திருக்கிறோம். அதே சமயம், நமது தார்மிக நெறிகளும் பண்பாடும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. அதனால் தான் நம்மால் முழுமையான வளர்ச்சியை எட்ட முடியாமல் உள்ளது.

இந்நிலையில், சுதந்திர தின விழாவை சம்பிரதாயமான விழாவாகக் கொண்டாடாமல், அனைவரும் பங்கேற்கும் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டோம். அதற்காக, திருப்பூர் நகரில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், சேவை அமைப்புகளை ஒருங்கிணைத்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்விழாவில், நாட்டின் தற்போதைய நிலை, நமது பிரச்னைகளுக்கு தீர்வு ஆகிவற்றை ஆராயும் கருத்தரங்குகளும், மாணவர் கலைநிகழ்ச்சிகளும், சேவையுள்ளங்களைப் பாராட்டும் நிகழ்வும் நடைபெற உள்ளன. இவ்விழாவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

  • நாள்    : 15.08.2012, புதன்கிழமை
  • நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை.
  • இடம்  : நகர மண்டபம், திருப்பூர்.  
வாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்!
  வாருங்கள் திருப்பூரை மேலும் வளப்படுத்துவோம்!  

***
நிகழ்ச்சி நிரல்

ஆக. 15, 2012, புதன்கிழமை, காலை 9.00 மணி
துவக்க விழா: தேசியக் கொடியேற்றம்



தமிழ்த்தாய் வாழ்த்து

தலைமை: : திரு. K.P.கோவிந்தசாமி
                      தலைவர், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்.

முன்னிலை: திரு. D. லிங்க்ஸ் சௌகத் அலி
                       D.K.T. கல்வி நிறுவனம், திருப்பூர்.

                      திரு. A.ராதாகிருஷ்ணன்
                      மாவட்டச் செயலாளர், காந்திய மக்கள் இயக்கம்.

                      திரு. தாமு.வெங்கடேசன்
                      தலைவர், திருப்பூர் டம்பிள் டிரையர் சங்கம்

கொடியேற்றுபவர்: திரு. தியாகி G.முத்துசாமி
                       செயல் தலைவர், அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதி 

-----------------------------------------------------------------


காலை 9.30 மணி - காலை 11.00 மணி:  
கருத்தரங்கம் - 1: தொழிலும் பொருளாதாரமும்

தலைமை: திரு.M.P.முத்துரத்தினம்
                    தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்

முன்னிலை: திரு.S.நாகராஜன்
                    தலைவர், திருப்பூர் சாயஆலை உரிமையாளர் சங்கம்

கருத்தாளர்கள்:

                     திரு. ராஜா சண்முகம்
                     தலைவர், நிப்ட்-டீ கல்லூரி, திருப்பூர்.

                     திரு. பேரா.ப.கனகசபாபதி
                    இயக்குனர், தமிழ்நாடு நகரியல் கல்வி மையம், கோவை

----------------------------------------------------------------- 

காலை 11.00 மணி - 11.30 மணி: 
இசை நிகழ்ச்சி

தலைமை: திரு. வழக்குரைஞர் V.வீரராகவன்
                    தலைவர், ஷண்முகானந்த சங்கீத சபா, திருப்பூர்

முன்னிலை: திரு. M.அகமது பைசல்
                     செயலாளர், குர்பானி அறக்கட்டளை, திருப்பூர்.

‘வளரும் சிகரம்' செல்வன் சு. மகிழன் பரிதி குழுவினரின்

தேசபக்திப் பாடல்கள் 
----------------------------------------------------------------- 

காலை 11.30 மணி - மதியம் 01.00 மணி:  

கருத்தரங்கம் - 2 : இயற்கை வளங்களும் சுகாதாரமும்

தலைமை: திரு. R .அண்ணாதுரை
                    திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு

முன்னிலை: திரு. N.S .பழனிசாமி
                    தலைவர், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்

கருத்தாளர்கள்:

                 திரு. Dr. வெ. ஜீவானந்தம், MBBS, 
                 தலைவர், தமிழக பசுமை இயக்கம், ஈரோடு.

                திரு. Dr. அ.காசிப்பிச்சை, BVSc , 
                தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம், திருமானூர்
-----------------------------------------------------------------

மதியம் 01.00 மணி - பிற்பகல் 2.00 மணி உணவு இடைவேளை
-----------------------------------------------------------------

பிற்பகல் 2 .00 மணி முதல்  3 .00 மணி வரை

பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்

தலைமை: திரு. Dr. K. கிங் நார்சியஸ்,
                      தலைவர்,  மிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கம்

முன்னிலை: திருமதி ராஜாத்தி சந்தானகிருஷ்ணன்
                     முன்னாள் தலைவர், இன்னர்வீல் சங்கம், திருப்பூர்

-----------------------------------------------------------------
பிற்பகல் 3.00 மணி - மாலை 4.30 மணி:  
கருத்தரங்கம்-  3: அரசியலும் நிர்வாகமும்

தலைமை: திரு. R. ஈஸ்வரன்
                    தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்,  திருப்பூர்

முன்னிலை: திரு. M.கந்தசாமி
                    ஓகே டெக்ஸ்டைல்ஸ், திருப்பூர்

கருத்தாளர்கள்:

                   திரு. K.தங்கவேலு, MLA 
                   சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் தெற்கு

                   திரு. R.லட்சுமண நாராயணன்
                   வழக்குரைஞர், கோவை.
-----------------------------------------------------------------

மாலை 4.30 மணி -  6.00 மணி: 
கருத்தரங்கம் – 4 : கல்வியும் பண்பாடும்

தலைமை: திரு. P.V. ரவி
                   தலைவர், பார்க் கல்வி நிறுவனங்கள், திருப்பூர்.

முன்னிலை: திரு. எக்ஸ்லான் K .ராமசாமி
                    செயலாளர், விவேகானந்த வித்யாலயா, திருப்பூர்.

கருத்தாளர்கள்:

                      திரு. கிருஷ்ண ஜெகநாதன்
                      தேசிய கல்விக் கழகம், சென்னை

                      திரு. அரவிந்தன் நீலகண்டன்
                      ஆராய்ச்சியாளர், விவேகானந்த கேந்திரா, கன்னியாகுமரி.

-----------------------------------------------------------------
மாலை 6.00 மணி முதல் மாலை 6.45 மணி வரை
சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா,
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

தலைமை: வணக்கத்துக்குரிய திருமதி A.விசாலாட்சி
                                                       மாநகர மேயர், திருப்பூர் மாநகராட்சி

முன்னிலை: திரு. S.சுப்பிரமணியம்
                      தலைவர், மேகலா குழும நிறுவனங்கள், திருப்பூர்.

சேவை அமைப்புகளை கௌரவித்தல்:  திரு.G .குணசேகரன்,
                                                                    துணை மேயர், திருப்பூர் மாநகராட்சி

மாணவர்களுக்கு பரிசளிப்பு: திரு. V.பொன்னுசாமி,
                     செயலாளர், தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர்

-----------------------------------------------------------------

மாலை 6.45 மணி - இரவு 7.00 மணி வரை 
கலைநிகழ்ச்சி

தலைமை: திரு. அரிமா M.ராமகிருஷ்ணன்
                    தேசிய சிந்தனைக் கழகம்.

முன்னிலை: திரு. அருள்நிதி T.R.முரளிதரன்
                     மாவட்டத் தலைவர், முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு

அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவியரின்

'வீரத் தாய்' நாட்டிய நாடகம் 
----------------------------------------------------------------- 

இரவு 7.00 மணி -  8.00 மணி வரை
சுதந்திர தின நிறைவு விழா


தலைமை: திரு. K.பரஞ்சோதி,
                    நிர்வாக இயக்குனர், தி சென்னை சில்க்ஸ் நிறுவனங்கள், திருப்பூர்.

முன்னிலை: திரு. சக்தி M.சுப்பிரமணியம்,  
                     தலைவர், திரையரங்கு உரிமையாளர் சங்கம், திருப்பூர்.

ஈரோடு சு.சண்முகவேல் எழுதிய
'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூல் வெளியீடு

நூலை வெளியிடுபவர்: திரு. N.அருணாசலம்
                     நேஷனல் சில்க்ஸ், திருப்பூர்

விழா பேருரை: திரு. K.வைத்தியநாதன்
                             ஆசிரியர், தினமணி.

தேசிய கீதம் 

 -----------------------------------------------------------------

1 comment:

  1. சுதந்திர தினத் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்.
    நாங்களும் உங்களுடன் இணைந்து இவ்விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைகிறோம்.
    -விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம்

    ReplyDelete